Kathir News
Begin typing your search above and press return to search.

சீக்கிய சமூகத்தினருக்காக அரசு செய்த செயல்கள் இவ்வளவா? மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்..

சீக்கிய சமூகத்தினருக்காக அரசு செய்த செயல்கள் இவ்வளவா? மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 Oct 2023 2:40 AM GMT

சீக்கிய சமூகத்தினரின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னெப்போதும் இல்லாத பணிகளைச் செய்துள்ளது எனறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். தில்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். மனித குலத்திற்காகவும், நாட்டிற்காகவும் சீக்கிய மதத்தின் பெரியவர்கள் செய்த தியாகங்களுக்கு நிகராக உலகில் வேறு யாரும் செய்திருக்க முடியாது என்று அவர் கூறினார். ஒன்பதாவது குரு தேக் பகதூர் ஜி-யின் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்க முடியாது என்று அவர தெரிவித்தார்.


உலகின் ஒவ்வொரு மதமும் தனது சொந்த கருத்துகளுக்காக போராடிய போது, அந்த நேரத்தில் குருநானக் தேவ் ஜி முதல் பத்தாவது குரு வரை அனைவரும் அனைத்து மதங்களின் சமத்துவம் என்ற செய்தியை உலகிற்கு வழங்கினர் என்றும் இது முழு இந்தியாவுக்கும் பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். சீக்கியர்கள் சுதந்திரப் போராட்டம் முதல் நாட்டைப் பாதுகாப்பது வரை அதிகபட்ச தியாகங்களைச் செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.


கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சீக்கியர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங்களை மறக்க முடியாது என்றும் அவை அரசியல் ரீதியானவை என்றும் அவர் தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்படும் வரை அந்த கலவரங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். சீக்கிய சமூகம் மற்றும் அந்த மத குருமார்கள் சமூகத்திற்கும் மனிதகுலத்திற்கும் அளித்த பங்களிப்பை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் திருப்பிச் செலுத்த முடியாது என்று அமித் ஷா தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News