Kathir News
Begin typing your search above and press return to search.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி

நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு ஏகப்பட்ட உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி

KarthigaBy : Karthiga

  |  5 Nov 2023 7:15 AM GMT

நேபாளத்தில் நேற்று முன்தினம் இரவு 6.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆயின. இந்த நிலநடுக்கத்துக்கு அங்கு 140 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி அந்த நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதி அளித்துள்ளார்.


இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள்,சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருடம் அடைகிறேன். நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது. நேபாளத்தில் அனைத்து உதவிகளையும் செய்ய இந்திய தயாராக உள்ளது. எங்களின் எண்ணங்கள் பாதிக்கப்பட்டு குடும்பங்களுடன் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் "என குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News