சிறுதானிய உணவு தயாரிப்பில் கலக்கும் மதுரை பெண்.. பிரதமர் மோடி பாராட்டு..
By : Bharathi Latha
பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டும் வகையில், சிறுதானிய உணவு தயாரிப்பு தொழிலில் மதுரை அருகே கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி என்ற பெண் தொழில் முனைவோர் அசத்தி வருகிறார். ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் இவர் தயாரிக்கும் சிறுதானிய நொறுக்கு தீனிகளை அனைவரும் விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள் தற்போது நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் விதவிதமான பலகாரங்களை இவர்கள் சிறு தானிய முறையில் புகுத்தி வருகிறார்கள்.
MA., M. Sc., M. Ed., முடித்த தமிழ்செல்வி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஆசிரியராக பணியாற்றி வந்து விடுவது இவருடைய கணவர் விபத்தில் சிக்கியபோது அவருக்கு சத்துள்ள சிறுதானிய உணவுகளை தேடிப் பிடித்து வாங்கி கொடுத்தபோதுதான் அவற்றின் அருமை புரிய தொடங்கியது. அதனால் சிறுதானிய உணவு தயாரிப்பு தொழிலில் இறங்கி தற்போது சாதித்து கொண்டிருகிறார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி, இவரை டெல்லிக்கு அழைத்து, இவரது சிறு தானியத் தொழிலை பாராட்டி உலகளவில் சந்தைப்படுத்த ஊக்கப்படுத்தி அனுப்பினார்.
நரேந்திர மோடி அவர்களிடம் பாராட்ட பெற்ற மதுரை பெண்ணான்னு தமிழ்ச்செல்வியின் சிறுதானியம் விற்பனை தற்பொழுது அமோக மகா நடைபெற்று வருகிறது. அது மட்டும் கிடையாது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏற்றுமதி செய்வது அப்படித்தானே ஆலோசனையை இவரிடம் வழங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News