டீப்பேக் தொழில்நுட்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடியாக இறங்கிய பிரதமர்!
By : Sushmitha
கடந்த சில நாட்களாக பிரபல நடிகைகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்திய மக்கள் அனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தும் போது பாதுகாப்பையும் நம்பிக்கையும் வழங்குவது நமது கடமை என்றும் இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியும் டீப்பேக் என்னும் தொழில்நுட்பம் குறித்து கவலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் காணொளி வாயிலாக இன்று நடைபெற்ற ஜி-20 மாநாடு கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் எதிர்மறையான விளைவுகளும் ஏற்படுகிறது, இதனால் உலகம் கவலை அடைகிறது. இந்த வளர்ச்சி மக்களையும் சமூகத்தையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். மேலும் இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஜி 20 உறுப்பினர்கள் ஒன்றாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Source : Vikatan & Dinamalar