Kathir News
Begin typing your search above and press return to search.

சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஏழு நாள் கெடு விதித்த மத்திய அமைச்சர்! டீப் பேக்கிற்கு மத்திய அரசு உடனடி முடிவு!

சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஏழு நாள் கெடு விதித்த மத்திய அமைச்சர்! டீப் பேக்கிற்கு மத்திய அரசு உடனடி முடிவு!

SushmithaBy : Sushmitha

  |  24 Nov 2023 2:54 PM GMT

டீப் பேக் என்று கூறப்படும் போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக பரவப்படுவதால் தொடரப்பட்ட புகாரை அடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்காக தனி அதிகார நியமிக்கப்பட உள்ளார் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் பிரதமர் மோடி, நடிகைகள் ராஷ்மிகா, காஜோல் மற்றும் தற்போது சச்சின் மகள் சாரா சச்சின் ஆகியோரின் டீப் பேக் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது இது குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுத்தது இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சமூக வலைதளங்களில் நடைபெறும் விதிமீறல்கள் தொடர்பாக தனது கவலைகளை தெரிவிப்பதற்காகவே தனியாக ஒரு இணையதளத்தை மத்திய அரசு தொடங்க உள்ளதாகவும்! அவர்களுக்கு அறிவுரை எப்படி வழங்குவது புகார் எப்படி தெரிவிப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கவும் அந்த இணையதளத்தை மத்திய அரசு பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் டீப் பேக் புகைப்படத்தை வெளியிடும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணிப்பதற்கு தனி அதிகாரி ஒருவர் நியமிக்க உள்ளதாகவும் கூறினார்.


இறுதியில் சமூக வலையதள நிறுவனங்களுக்கு 7 நாட்கள் கெடு வழங்கி மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News