ஒரு அமைச்சர் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூற முடியாது! அதிரடி வாதங்கள்!! சானதன எதிர்ப்பு குறித்த திமுக அமைச்சர்கள், எம். பி. எதிரான வழக்கு விசாரணை
By : Sushmitha
ஒரு பிறப்பின் அடிப்படையில் ஜாதிப் பிளவுகளை சனாதன தர்மம் ஏற்படுத்துகிறது என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் திமுக எம். பி. ராஜா ஆகியோரின் கருத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை தொடரப்பட்ட வழக்கு குறித்த விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு வந்தது.
இதில் சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி கார்த்திகேயன், உலக அளவில் மிகவும் சகிப்புத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மதக் கொள்கைகளை சனாதன தர்மம் விளக்குகிறது என்றும் நான்கு அடிப்படை வருணங்களை மட்டுமே சனாதன தர்மம் குறிப்பிடுகிறது ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள அனைத்து ஜாதிகளை பற்றி சனாதான தர்மம் குறிப்பிடவில்லை என்று பகவத் கீதையில் உள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டியும்....!
"கண்ணில் கண்புரை இருந்தால் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ஆனால் அதற்கு பதிலாக முழு கண்ணையும் புடுங்க வேண்டியது இல்லை சனாதன தர்மமே ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒரு அமைச்சர் கூற முடியாது" என தனது வாதங்களை முன் வைத்தார்!
இதற்கு அடுத்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பீ. வில்சன் ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை இருப்பதை ரிட் மனுதாரர் ஒப்புக்கொண்டதாகவும் அதனால் இந்த நடைமுறைகளை ஒழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு பொருத்தமற்றது என்றும் கூறினார்.
இருதரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி திமுக எம்.பி. ஏ. ராஜா மற்றும் அமைச்சர் சேகர்பாபு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி. ராஜகோபாலன், ஆர். விடுதலை மற்றும் என். ஜோதி ஆகியோர் ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தீர்ப்பளித்து வாய்மொழி வாதங்களை முடித்துள்ளார்.
Source : The Commune