Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியர்கள்னா சும்மாவா.. உள்நாட்டில் தயாரான தேஜஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர்..

இந்தியர்கள்னா சும்மாவா.. உள்நாட்டில் தயாரான தேஜஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Nov 2023 2:07 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டில் அனைத்து வகையான உற்பத்தி மூலக்கூறுகளையும் கொண்டு வந்து அவற்றின் மூலம் நாம் இங்கேயே பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக முப்படைகளுக்கும் தேவையான தளவாடங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதற்கு அடித்தளம் போட்டது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தான். அந்த வகையில் தற்பொழுது இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் விமானத்தில் தன்னுடைய பயணத்தை நிறைவு செய்து இருக்கிறார் பிரதமர்.


இந்திய விமானப்படையின் (IAF ) மல்டிரோல் போர் விமானமான தேஜஸ் பயணத்தைப் பிரதமர் நிறைவு செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விமானப்படையின் மல்டிரோல் போர் விமானமான தேஜஸ் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், "தேஜஸில் ஒரு பயணத்தை வெற்றிகரமாக முடித்தேன். இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு ஊக்கத்தை வளப்படுத்தியது. நமது நாட்டின் திறன்களில் எனது நம்பிக்கையைக் கணிசமாக அதிகரித்தது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றி எனக்கு ஒரு புதிய பெருமையையும் நம்பிக்கையையும் அளித்தது".


“இன்று தேஜாஸ் விமானத்தில் பறக்கும் நான், நமது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தற்சார்பில் உலகில் எவருக்கும் குறைவானவர்கள் இல்லை என்பதை மிகுந்த பெருமிதத்துடன் சொல்ல முடியும். இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனம் மற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்" இன்று பிரதமர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News