கனமழையால் மிதந்த முதல்வரின் கொளத்தூர் தொகுதி.. புலம்பிய மக்கள்.. போட்ட செய்தியை டெலிட் செய்த பாலிமர் நியூஸ்..
By : Bharathi Latha
கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் ஸ்தம்பித்ததால், தி.நகர், அண்ணாநகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல சுரங்கப்பாதைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மாலை 6 மணிக்கு அலுவலகம் கிளம்பியவர்கள் இரவு 11 மணி வரை தாமதமாக வீடுகளை அடைந்தனர். சில இடங்களில் மின்சாரம், தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. தி.நகர் ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் கார்கள் நிறுத்தப்பட்டன. குறிப்பாக, இந்த கனமழையின் காரணமாக கொளத்தூர் தொகுதி எப்படி காட்சியளிக்கிறது என்பது தொடர்பாக பாலிமர் நியூஸ் வீடியோ செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
ஆனால் அதை உடனே டெலிட் செய்தும் இருக்கிறது இது தொடர்பாக பல்வேறு சமூக வலைதள பயனாளர்கள் ஏன் போட்ட செய்தியை டெலிட் செய்தார்கள் என்று தொடர்பான கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட வீடியோவில் கொளத்தூர் தொகுதி (CM மு.க.ஸ்டாலின் தொகுதி) பகுதியைச் சேர்ந்த ஒருவர் , அப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள அவல நிலை குறித்து புலம்பியதாக பாலிமர் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக அந்த நபர் கூறும் பொழுது, "நான் பிறந்ததில் இருந்து இந்தப் பகுதியில்தான் வசிக்கிறேன். நான் இந்த வழியில் தான் அலுவலகம் சென்று வருகிறேன். இந்த சிறிய மழைக்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 2-3 மணி நேர மழையால் அந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கியதாக குடியிருப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இது பற்றி அவர் மேலும் கூறும் பொழுது, "சிறப்பு என்னவென்றால், புதிய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்கள் 8 மாதங்களுக்கும் மேலாக இந்த இடத்தை அடைத்து வைத்திருந்தனர். இப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எதிர்புறம் வாகனத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் உள்ளது. பயன் இல்லை. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவு வீணடிக்கப்படுகிறது. 8 மாதங்களுக்கு நாங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியிருந்தது. இந்தப் பாதையில் பயணிக்காமல் அண்ணா சாலையில்தான் செல்ல வேண்டியிருந்தது. நாங்கள் இன்னும் அதே சிரமத்தை எதிர்கொள்கிறோம். மாநகராட்சி சில நடவடிக்கைகளை முன்னெடுத்தால் நல்லது.
இவ்வளவு தண்ணீர் தேங்கியுள்ள இங்கு வசிக்கும் மக்களின் அவல நிலையை கற்பனை செய்து பாருங்கள். மேலும், இது முதல்வர் தொகுதி. அவர்கள் அதை அதிகமாக கவனித்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் செய்வதில்லை. விஐபி பகுதிகளுக்கும், பிரபலங்கள் இருக்கும் இடங்களுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். நாங்களும் மக்கள்தானே? நம்மிடம் இருந்தும் வரி வசூலிக்கிறார்கள் சரியா? இவற்றை முன்னிலைப்படுத்தி சில நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News