Kathir News
Begin typing your search above and press return to search.

பக்தரின் இறப்பு.. இந்து சமய அறநிலையத்துறை அலட்சியம்.. அண்ணாமலை கண்டனம்..

பக்தரின் இறப்பு.. இந்து சமய அறநிலையத்துறை அலட்சியம்.. அண்ணாமலை கண்டனம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Dec 2023 4:16 AM GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அருகே திருப்பரங்குன்றம் பக்தர் மின்சாரம் தாக்கி இறந்தார். சம்பவம் குறித்து தற்பொழுது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த நபரின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தன் பின்னர் மாவட்ட கலெக்டர் அது கவனத்தில் எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ஜோதிபா. அங்குள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி. இவரது 3 மகன்கள் மற்றும் உறவினர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று பகலில் வந்தனர். இவர்கள் கடலில் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயில் முன்பு வந்தனர். பின்னர் வந்த இடத்தில் அவருடைய ஒரு மகன் தற்பொழுது மின்சாரம் தாக்கி இறந்து இருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கோயிலுக்கு வந்த இடத்தில் எங்கள் பிள்ளையை பறிகொடுத்து விட்டோமே என பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பினார்கள். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை இவர்கள் கூறும் பொழுது, "திருசெந்தூரில் பக்தர் இறந்ததற்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சிய போக்கு தான் காரணமாக இருப்பதாகவும்" அவர் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

Input & image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News