Kathir News
Begin typing your search above and press return to search.

உங்கப்பா கூவம் முதலை கதை தெரியுமா...? மழை விட்டவுடன் முதல்வரை நோக்கி செம்ம நெத்தியடி கேள்வி எழுப்பிய வானதி.....

உங்கப்பா கூவம் முதலை கதை தெரியுமா...? மழை விட்டவுடன் முதல்வரை நோக்கி செம்ம நெத்தியடி கேள்வி எழுப்பிய வானதி.....

Mohan RajBy : Mohan Raj

  |  5 Dec 2023 1:51 PM GMT

மழை முடிந்த கையோடு அதிரடியில் இறங்கிய வானதி சீனிவாசன்... 1967 கூவம் முதலை சம்பவத்தை வைத்து கேட்ட நச் கேள்வி...

தற்பொழுது சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்துள்ளது, அதன் காரணமாக தற்பொழுது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி அதனால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது, கடந்த இரு தினங்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு! தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு! மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்கும் நிலையில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இன்று காலை முதல் மழை குறைந்ததால் மெதுவாக தண்ணீர் வடிய துவங்கி தற்பொழுது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது, இந்த நிலையில் இரு தினங்களாக அரசியல் ரீதியாக திமுகவை எதுவும் விமர்சிக்காத பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தற்பொழுது முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் வெளியிட்ட அந்த அறிக்கையில் 1967இல் கூவத்தில் முதலை என்ற கதையையும் கூறி தற்பொழுது உள்ள சென்னை கனமழை சூழலையும் ஒப்பிட்டு வானதி கேள்வி எழுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்வர் ஸ்டாலின் அவர்களே விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப போர்க்கால நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்.

மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை நகரமே கடுமையான பதிப்பிற்குள்ளாகியுள்ளது. 4000 கோடி பணிகளால் தான் பாதிப்பு குறைவு என மீண்டும் விளம்பரத்தில் இறங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

2015-ல் 28 முதல் 34 சென்டிமீட்டர் மழை பெய்தது. தற்போது பெருங்குடியில் மிக அதிகமாக 45 சென்டிமீட்டர் பெய்துள்ளது. ஆனால் சென்னை முழுவதும் பரவலாக 20 முதல் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டை விட பாதிப்பு அதிகம். அப்படி இருக்கையில் 4000 கோடி பணிகளால்தான் பாதிப்பு குறைவு என கூறுவது எப்படி?

2021ல் சென்னையில் பெருமழை பெய்தபோதும் முந்தைய அரசை குறை கூறினார். தற்போதும் இதே பதிலை தான் கூறுகிறார். கடந்த 27 வருடத்திற்கு முன்னர் 1996 ல்தொடங்கபட்ட சிங்கார சென்னை திட்டம் என்ன ஆனது ?

கடந்த 1967 ல் கூவம் சுத்தம் செய்யப்போவதாக கூறி ஒரு திட்டத்தை அறிவித்தார் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. சுத்தம் செய்யும் வேலை எப்போது நிறைவடையும் என்று சட்டசபையில் கேள்வி கேட்ட போது மூன்று நாட்கள் கழித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி கூவத்தில் சுத்தம் செய்யும் வேலையை நிறுத்தப்போவதாக கூறினார் அதற்கு காரணமாக கூவத்தில் முதலை இருக்கிறது என கூறினார். திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மூன்று கோடி முதற்கட்ட பணிக்கே செலவானது எனவும் கூறினார்.

50 ஆண்டுகளாக கூவத்தை சுத்தம் செய்யவில்லை. திமுக ஆட்சி வரும்போது எல்லாம் கூவம் சுத்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படும் ஆனால் கூவமும் சுத்தமாகவில்லை. சென்னையும் சிங்கார சென்னை ஆகவில்லை. எப்போதுதான் சென்னைக்கு விடிவுகாலம் பிறக்கும் ?

சிங்கார சென்னை திட்டத்திற்கு ஒதுக்கிய நிதிக்குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாராக உள்ளாரா முதல்வர் ஸ்டாலின்?

இல்லை இதுவரை திமுக ஆட்சியில் ஆறுகளை தூர்வாரவும் கூவத்தை சுத்தப்படுத்தவும் ஒதுக்கியுள்ள நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கை விட தயாரா?

இவ்வாறு கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம். விளம்பரம் தேடாமல் வெள்ளத்தில் சிக்கி முடங்கியிருக்கும் மக்கள் இயல்புநிலை திரும்ப நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு முதல்வர் பதில் கூறுவாரா? என வரிசையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

வானதி சீனிவாசன் எழுப்பிய இந்த கேள்வியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. திமுக தரப்பிலிருந்து இதற்கு இதுவரை பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News