சென்னை வெள்ள நிவாரண பணிக்காக "அண்ணாமலை இட்ட உத்தரவால் களத்தில் இறங்கிய காவிகள்"
By : Sushmitha
சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையாலும் நேற்று முன்தினம் சென்னையை நோக்கி நகர்ந்து வந்த மிக்ஜம் புயலாலும் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மின்சாரமும் தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகள் முழுவதும் முழங்காலில் இருந்து கழுத்து வரையிலான தண்ணீர் தேங்கி இருப்பதை சந்தித்து மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடினர். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறி வந்த தமிழக அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஒவ்வொரு தன்னார்வ தொண்டுகள் ராணுவ படை வீரர்கள் தரப்பில் சில உதவிகள் செய்யப்பட்ட நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது காவிகளுக்கு மிக்ஜாம் புயல் காரணமாக பொதுமக்களுக்கு உதவுவதற்காக பாஜக சார்பாக ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சகோதரர்களும், நிர்வாகிகளும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து, குழுவாகச் செயல்பட்ட, பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து அவசர கால உதவி எண்ணும் பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டது அதுமட்டுமின்றி 5000 பேருக்கான உணவு தயார் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. சென்னை மக்களுக்காகவே நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்புவதற்கு நாமக்கலில் இருந்தும் கோவையிலிருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு தி நகர், மயிலாப்பூர், திருவான்மியூர், நீலாங்கரை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை என மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக நிர்வாகிகளான எஸ். ஜி. சூர்யா, கரு. நாகராஜ், வினோஜ் பி. செல்வம் மற்றும் பலர் களத்தில் இறங்கினர்.