Kathir News
Begin typing your search above and press return to search.

உடையும் நிலையில் உள்ள புழல் ஏரி; அலட்சியம் காட்டும் நீர்வளத்துறை!!

உடையும் நிலையில் உள்ள புழல் ஏரி; அலட்சியம் காட்டும் நீர்வளத்துறை!!

SushmithaBy : Sushmitha

  |  7 Dec 2023 12:48 AM GMT

சென்னையை கடந்த மிக்ஜம் புயலால் ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. இதன் வரிசையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியிலும் மழைநீர் வேகமாக நிரம்பியது. அதாவது புழல் ஏறியது 21. 20 அடி உயரம் மற்றும் 3.300 டிஎம்சி நீரை இருப்பு வைக்க முடிகின்ற ஏரி. புயலால் ஏற்பட்ட கனமழையால் இந்த ஏரி வேகமாக நிரம்பியது. இதனால் கடந்த நான்காம் தேதி சென்னையை புயல் நெருங்கிய போது 8,500 காண அடி நீர் ஏரிக்கு வந்ததால் அன்று மதியமே 4000 கன அடியாக ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

ஆனால் அதற்குப் பிறகும் பெய்த பலத்த கனமழையால் புழல் ஏரிக்கு வந்த நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் அந்த ஏரியின் உபரி நீர் 7000 கன அடியாக வெளியேற்றப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ஏரி மீது வரும் பொது மக்களை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதால் வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த ஏரியின் கரை உடைந்தால் திருவாரூர் மாவட்ட பகுதிகள் அனைத்தும் துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி நீர்வளத் துறையும் அதன் அமைச்சகமும் போர்க்கால நடவடிக்கைகள் எதையும் எடுக்காமலும், அறிவிப்பு ஏதும் வெளியிடாமலும் அலட்சியமாக உள்ளன.

ஆதாரம்: தினமலர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News