Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி அரசின் திட்ட பயன்கள் வீடுதேடி வருகின்றன.. புதிய மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இந்தியா..

மோடி அரசின் திட்ட பயன்கள் வீடுதேடி வருகின்றன.. புதிய மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இந்தியா..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Dec 2023 12:58 AM GMT

அரசுத் திட்டங்களைப் பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய காலம் போய்விட்டது. இப்போது மத்திய அரசால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை எனப்படும் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் அரசின் நலத்திட்டப் பயன்கள் வீட்டு வாசலுக்கே வருகின்றன. அரசு சேவைகள் கடைசி நிலை வரை முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும், தேசிய அளவிலான இந்தப் பயணம் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இம் மாவட்டத்தில் நவம்பர் மாத இறுதியில் தொடங்கிய நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை இதுவரை இரண்டு வட்டங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சென்றடைந்துள்ளது. இந்த யாத்திரை நடைபெறும் இடங்களில் பல்வேறு மத்திய அரசுத் துறைகளின் சேவைகள் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு அதன் பயன்களும் உடனடியாக அவர்களைச் சென்றடைகின்றன. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அது தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன.


இந்த யாத்திரை நடைபெறும் இடங்களில் அஞ்சல் துறை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் புதிய சேமிப்பு வங்கி கணக்குகளைத் தொடங்குவதற்கான வசதிகளை வழங்குகின்றன. செல்வ மகள் சேமிப்புத் திட்டக் கணக்குகள், தொடர் வைப்புக் கணக்குகள், பொது வருங்கால வைப்பு நிதி, பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் ஓய்வூதிய திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், மகளிர் சேமிப்பு சான்றிதழ் மற்றும் பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா போன்ற திட்டங்களின் பயன்களை அடைவதற்கான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. ஆதார் புதுப்பித்தல் சேவைகள், குழந்தை ஆதார் பதிவு, அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சேவைகளும் அஞ்சல் துறையால் இந்த யாத்திரையில் வழங்கப்படுகின்றன.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News