பால், தண்ணீர் கிடைக்காமல் திண்டாடும் சென்னை வாசிகள்! டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசு!
By : Sushmitha
மிக்ஜம் புயலால் சென்னை நகர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானர். இடைவிடாது தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் சென்னை நகரம் முழுவதும் மழை நீரில் தேங்கியிருந்தது, ஆனால் மழை நின்று மூன்று நாட்களுக்குப் பிறகும் தேங்கி இருந்த மழைநீர் வடியாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 4000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்ததற்கு சென்னை மக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மழை நீர் வடியாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் வெளியில் செல்ல முடியவில்லை அப்படி மீறி சிரமத்தை மீறி சென்று வாங்கினால் ஒரு பாலின் விலை 50 ரூபாய், ஆனால் அதுவும் எங்களுக்கு கடந்த மூன்று நாட்களாக கிடைக்கவில்லை என்று மக்கள் ஒவ்வொருவரும் கடும் கொந்தளிப்பில் தங்களது வேதனைகளை தெரிவிக்கின்றனர்.
இப்படி பால், குடிநீர் வாங்குவதற்கு முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்ற சமயத்தில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பகுதி மக்கள், எங்களிடம் கால் கழுவுவதற்கு கூட தண்ணீர் இல்லை ஆனால் மதுக்கடைகள் திறக்க வேண்டுமா? இதில் என்ன நியாயம் இருக்கிறது? என்ற சரமாரியான கேள்விகளை அரசை நோக்கி முன்வைக்கின்றனர்.
Source : The Commune