சீனாவை விட இந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆப்பிள் நிறுவனம்.. தமிழ்நாட்டில் தொழிற்சாலையா..
By : Bharathi Latha
இந்தியாவில் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலைகளை நிறுவ ஆப்பிள் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதற்கு டாடா குழுமமும் முழு ஒத்துழைப்பை தரும் வகையில் தன்னுடைய அறிவிப்புகளை கொடுத்து வருகிறது. எகனாமிக் டைம்ஸ் கொடுத்த செய்தியின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஓசூரில் ஒரு தொழிற்சாலையை கட்ட டாடா திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படாததால் ஆலோசனையில் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த தொழிற்சாலை வசதி சுமார் 20 அசெம்பிளி லைன்களை கொண்டிருக்கும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. 12 முதல் 18 மாதங்களுக்குள் தொழிற்சாலை இயக்க வேண்டும் என்பதை இதன் நோக்கம். ஆப்பிள் முயற்சிகளை மேம்படுத்தும் டாட்டா உடனான அதன் ஒத்துழைப்பு தற்போது வரை அடுத்த கட்டத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டு இருக்கிறது. குறிப்பாக இவர்களுடைய கூட்டணியில் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் அருகிலுள்ள கர்நாடகா மாநிலத்தில் விஸ்ட்ரான் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான ஐபோன் தொழிற் சாலையை இயக்குகிறது.
இந்தியா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உள்ள அசெம்பிளி மற்றும் உதிரிபாக உற்பத்தி கூட்டாளர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் ஆப்பிள் சீனாவிற்கு அப்பால் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது. குறிப்பாக சீனாவை விட இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் செயல்பாடு அமைந்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த மானியங்கள், தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் மற்றும் பெகாட்ரான் போன்ற பெரிய ஆப்பிள் சப்ளையர்களை இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை அதிகரிக்க ஊக்குவித்தன. இது கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்களை அசெம்பிள் செய்வதில் ஆப்பிளை எளிதாக்கியுள்ளது, இதன் மூலம் சாதனத்தின் உற்பத்தியில் இந்தியாவின் விகிதத்தை சுமார் 7 சதவீதமாக உயர்த்தியது.
Input & Image courtesy: News