Kathir News
Begin typing your search above and press return to search.

மகளிர் உரிமை தொகை இதுவரை கிடைவில்லை என ஆட்சியர் சரயுவை சூழ்ந்து கொண்ட பெண்கள்!

மகளிர் உரிமை தொகை இதுவரை கிடைவில்லை என ஆட்சியர் சரயுவை சூழ்ந்து கொண்ட பெண்கள்!

SushmithaBy : Sushmitha

  |  11 Dec 2023 1:31 AM GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ராஜாஜி சிலைக்கு நம் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவிக்க சென்ற பொழுது மகளிர் உரிமைத் தொகை கேட்டு அப்பகுதி பெண்கள் சூழ்ந்துள்ளனர்.

தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டமானது திமுக ஆட்சி அமைத்தால் மாதம் தோறும் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி திமுகவால் வழங்கப்பட்டது. இருப்பினும் திமுக ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு பிறகு பல விதிமுறைகளை தமிழக அரசு விதித்ததால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ராஜாஜி 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொரப்பள்ளி அகரஹாரம் பகுதியில் உள்ள ராஜாஜி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சரயு மாலை அணிவித்து திரும்பிய பொழுது தொரப்பள்ளி அக்ரஹாரமும் அதன் சுற்றியுள்ள பகுதி பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டு எங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்கவில்லை இதற்காக நாங்கள் பலமுறை விண்ணப்பமும் விடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளனர். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் மாவட்ட ஆட்சியரை சூழ்ந்திருந்த பெண்கள் கூட்டம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்பதை ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர், இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source : News Tamil 24×cx7

Next Story
கதிர் தொகுப்பு
Trending News