Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை மக்களை மீட்க முதல் ஆளாக இறங்கிய இந்திய ஆயுதப்படை வீரர்கள்! கிடைக்காத அங்கீகாரம்!

சென்னை மக்களை மீட்க முதல் ஆளாக இறங்கிய இந்திய ஆயுதப்படை வீரர்கள்! கிடைக்காத அங்கீகாரம்!

SushmithaBy : Sushmitha

  |  12 Dec 2023 12:49 AM GMT

மிக்ஜம் சூறாவளியால் பாதிப்படைந்த சென்னையை மீட்பதற்கு டிசம்பர் நான்காம் தேதியிலேயே சென்னையில் மக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் இறங்கியுள்ளது. அதன்படி மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், வேளச்சேரி, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற முக்கிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ராணுவ வீரர்கள் தொடங்கியுள்ளனர். மின்சாரம் இல்லாமலும் மருத்துவ உதவி கிடைக்காமலும் உணவு மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருள்களும் கிடைக்காமல் தத்தளித்து வந்த முதியவர்கள், குழந்தைகள், கைக்குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோரை தங்களுக்கு கிடைத்த வளங்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்டு உள்ளனர்.

ஆனால் இவர்களின் பங்களிப்பை எந்த ஊடகமும் காட்சிப்படுத்தாமல் இருந்தது வருத்தத்திற்குறியது, எனினும் டிபன்ஸ் பி ஆர் ஓ சென்னையில் ஆயுதப்படை வீரர்கள் மேற்கொண்ட அசாதாரண முயற்சிகளை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. மேலும் இந்திய ராணுவத்தின் 12வது மெட்ராஸ் பிரிவு, தக்ஷின் பாரத் பகுதி, வேளச்சேரி ரயில் நிலையம், மணப்பாக்கம் ரிவர் வியூ ரோடு, புலிதிவாக்கம், மேடவாக்கம், புழுதிவாக்கம் மற்றும் வட சென்னை போன்ற பகுதிகளில் முக்கியப் பங்காற்றியது. மிக்ஜம் சூறாவளிக்குப் பிறகு, இந்திய விமானப்படை மற்றும் பறக்கும் பயிற்றுனர்கள் பள்ளி மூலம் தெற்கு மற்றும் வட சென்னை ஆகிய இரு இடங்களில் முக்கியமான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேடவாக்கத்தில் இருந்து புழுதிவாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் வரை, தென் சென்னையில் 8 இடங்களில் இரண்டு ஹெலிகாப்டர்கள் உதவி வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இப்படி சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் சிக்கித் தவித்த மக்களை மீட்க ஆயுதப்படையினர் மேற்கொண்ட முயற்சி என்பது தன்னலமற்றது, ஆனால் அதற்கு அங்கீகாரம் கொடுப்பது குடிமக்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள அரசாங்கத்தின் கடமையாக்கும்!

Source : The Commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News