Kathir News
Begin typing your search above and press return to search.

அம்பலமான திமுக அரசின் பொய்!

அம்பலமான திமுக அரசின் பொய்!

SushmithaBy : Sushmitha

  |  13 Dec 2023 2:01 AM GMT

கடந்த வாரத்தில் சென்னையைப் புரட்டி போட்ட மிக்ஜம் புயலால் சென்னை மக்கள் பெரும் துயரங்களை சந்தித்தனர். இதனை அடுத்து சென்னையில் பெய்த மழையின் அளவு குறித்து ரிப்பன் மாளிகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், வரலாறு காணாத வகையில் சென்னையில் பெருமழை கொட்டி தீர்த்துள்ளது! 2021 ஆம் ஆண்டில் நவம்பரில் பெய்த மழையின் அளவை வைத்தும் அப்பொழுது தேங்கி மழை நீரை கணக்கில் கொண்டும் தற்பொழுது ரூபாய் 4000 கோடி செலவில் வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் தற்பொழுது வெள்ள பாதிப்பு குறைவாக உள்ளது எடுத்துக்காட்டாக 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தை நம்மால் மறைந்திருக்க முடியாது மீனம்பாக்கத்தில் அன்றைய தினம் பெய்த மழையின் அளவானது 34 சென்டிமீட்டர் ஆனால் தற்பொழுது 43 சென்டிமீட்டர் மழை அதுவும் 36 மணி நேரத்தில் பெய்துள்ளது இது மிகவும் அதிகமாகும்! என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த 2015 ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் இருந்து டிசம்பர் 10ஆம் தேதி வரை பெய்த மழையின் அளவானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் இருந்து டிசம்பர் 10ஆம் தேதி வரை பெய்த ஒட்டுமொத்த மழையின் அளவைவிட அதிகம் என்று புள்ளி விவரத்துடன் தரவுகளை வெளியிட்டுள்ளது.

இப்படி தமிழக அரசு தரப்பில் 2015 விட 2023 அதிக மழை பெய்துள்ளது அதனால் தான் மீட்பு நடவடிக்கைகள் நிவாரண நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டு வருகின்ற நிலையில் 2015 இல் பெய்த மழையை விட 2023 இல் பெய்த மழை குறைவு என சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News