கிருஷ்ண ஜென்ம பூமி நிலம் விவகார வழக்கு! ஆய்வு செய்ய அனுமதித்தது அலகாபாத் உய்நீதிமன்றம்!
By : Sushmitha
உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணஜென்ம பூமி கோவில் உள்ளது. அங்கு முன்பு கட்டப்பட்டிருந்த காத்ர கேசவ் தேவ் கோவில் இடிக்கப்பட்டு தற்பொழுது ஷாஹி இத்கா என்ற மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதியானது கிருஷ்ணர் பிறந்த இடம் என்பதால் மதுரா நீதிமன்றத்தில் அந்த இடத்தை சர்வே செய்து ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரா நீதிமன்றம் மசூதியில் ஆய்வு செய்வதற்காக தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து இஸ்லாமிய அமைப்புகள் மதுரா நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணஜென்ம பூமி நிலம் விவகாரம் தொடர்பாக வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் மசூதியில் ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கு நடத்தப்படும் ஆய்வு பற்றியும் இந்த ஆய்வை நடத்தும் கமிஷன் மற்றும் அவற்றிற்கான விதிமுறைகள் குறித்து வரும் திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவையும் எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளன.
Source : Dinamalar