பெண்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாடுபடும் பாஜக அரசு - மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பேச்சு!
By : Sushmitha
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக்குமாண்டவியா டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்தவர், கிராமங்கள் தோறும் 35 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளது, இவை பெண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சானிட்டரி நாப்கின்களை கிராமத்தில் இருக்கும் பெண்கள் உபயோகப்படுத்துபவர்களின் விகிதம் 45 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வழி என்பது அந்நாட்டில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் நடைபெறுவது, மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பெண்களின் பாதுகாப்பையும் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகிறது.
அதோடு தற்பொழுது நம் நாட்டில் உள்ள 210க்கும் மேற்பட்ட பழங்குடியின மாவட்டங்களில் அரிவாள் செல் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar