Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியர்கள் ஈரானிற்கு செல்ல விசா தேவை இல்லை! "புதிய அறிவிப்பை வெளியிட்டது ஈரான்"

இந்தியர்கள் ஈரானிற்கு செல்ல விசா தேவை இல்லை! புதிய அறிவிப்பை வெளியிட்டது ஈரான்

SushmithaBy : Sushmitha

  |  16 Dec 2023 3:49 AM GMT

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை என்பதும் மிக முக்கிய பங்கை பெற்றது. மேலும் சுற்றுலா துறையில் முன்னேற்றத்தை காண்பதன் மூலம் ஒரு நாட்டின் உள்ளூர் மக்களுக்கும் நேரடியாக மற்றும் மறைமுகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிலும் சில நாடுகள் சுற்றுலாத்துறையவே நம்பி இருப்பதால் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் பல சலுகைகளை அவ்வப்போது சில நாடுகள் வழங்கி வரும், அப்படிப்பட்ட தளர்வுகளில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது விசா விதிகளில் இருந்து தளர்வு!

இதன் அடிப்படையில் சமீபத்தில் இலங்கை, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் செல்வதற்கு விசா தேவை இல்லை என்று அறிவிப்புகள் வெளியானது. இதற்குப் பிறகும் வியட்நாம் இந்த பட்டியலில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில், தற்பொழுது விசா இல்லாமல் இந்தியர்கள் ஈரானிற்கும் செல்லலாம் என்ற ஒரு அறிவிப்பை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. சுற்றுலாவை ஊக்கப்படுத்துதல் மற்றும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளிலிருந்து ஈரான் வருவதற்கு விசா விதிமுறைகளை தளர்வு செய்வதாக ஈரான் நாட்டின் பாரம்பரிய மற்றும் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Source : Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News