விவசாயிகளின் மனம் குளிர மத்திய அரசின் 'மாஸ்' திட்டம்!
விவசாயிகளுக்கு மத்திய அரசு நல்லதொரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைவார்கள்.

By : Karthiga
மோடி அரசு ஏழை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் செய்து வரும் நலத்திட்டங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. மத்திய அரசு செய்து வரும் ஒவ்வொரு நலத் திட்டத்திலும் பயனடைந்தோர் ஏராளம். மத்திய அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை பாராட்டி மீண்டும் மோடி அரசே வேண்டும் என்று மனதில் நினைத்து ஏங்குபவர்களும் உண்டு. அந்த அளவுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்று மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது அதில் ஒன்றுதான் விவசாயிகளுக்கான இந்த திட்டம்
நாடு முழுவதும் விவசாயிகளின் நிதி நிலையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட மற்றும் 2 ஹெக்டேர் நிலம் கொண்ட விவசாயிகளுக்கு பி.எம். கிசான் மாந்தன் யோஜனா (PM Kisan Maandhan) திட்டத்தை வெளியிட்டுள்ளனர். இத்திட்டத்தில் மாதந்தோறும் 18 வயதினர் ரூ.55 ஆகவும், 30 வயதுடையோர் ரூ.110 ஆகவும், 40 வயதுடையோர் ரூ.200 எனவும் முதலீடு செய்து வர வேண்டும்.
அந்த விவசாயிக்கு 60 வயது பூர்த்தி அடைந்த உடன் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அருகாமையில் உள்ள பொதுச் சேவை மையத்தில் குடும்ப ஆண்டு வருமானம், நில ஆவணம் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அனைத்து விவசாயிகளும் இந்த நலத்திட்டத்தை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
