Kathir News
Begin typing your search above and press return to search.

சுய நிர்ணய உரிமைக்கு அழைப்பு விடுத்த திமுக எம்.பி.! திமுக அரசு செய்த செயல்!

சுய நிர்ணய உரிமைக்கு அழைப்பு விடுத்த திமுக எம்.பி.! திமுக அரசு செய்த செயல்!
X

SushmithaBy : Sushmitha

  |  16 Dec 2023 2:45 PM GMT

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 வது சட்டப்பிரிவை பிரதமர் மோடி அரசு ரத்து செய்ததை அங்கீகரித்து 370 வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில், திமுக எம் பி அப்துல்லா ராஜ்ய சபாவில் திராவிட பேச்சாளர் பெரியாரை மேற்கோள் காட்டி ஓவ்வொரு இனத்திற்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. இது காஷ்மீருக்கு பொருந்தும் என்று தெரிவித்தார். திமுக எம் பி யின் இந்த கருத்து கடும் கண்டனங்களை பெற்றதை அடுத்து அவையில் இருந்து அது நீக்கப்படும் என்று ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பெரியாரின் இனவாத மேற்கொள்ளை பேரவையிலிருந்து நீக்கியதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து ஆட்சேபனையும் தெரிவித்துள்ளனர். அதாவது மாநிலங்களவையில் அறிவாலயம் எம்.பி. அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது! மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்! மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்! என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், முதல்வரின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கருத்தினை மேற்கோள் காட்டி, கழக மாநிலங்களவை உறுப்பினர் சகோதரர் அப்துல்லா அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியது பாசிஸ்ட்டுகளுக்கு உதறலை ஏற்படுத்தியுள்ளது. அப்துல்லாவின் பேச்சிலிருந்த தந்தை பெரியாரின் பெயரையும் - மேற்கோளையும் நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.அவைக் குறிப்பில் இருந்து தான் தந்தை பெரியாரின் பெயரை நீக்க முடியும், ஒரு போதும், மக்களின் மனக்குறிப்பில் இருந்து அவரது பெயரை நீக்கவே முடியாது. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் - கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரான பாசிஸ்ட்டுகளின் இந்த அட்டூழியங்களுக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Source : The Commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News