சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய மத்திய நிதியமைச்சர்.. ராமநாதபுர மக்களுக்கு இனி விடிவு காலம்..
By : Bharathi Latha
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த பொழுது அங்கு இருக்கும் மக்கள் அவரிடம் வைத்த புகாரை தற்பொழுது உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து இருக்கிறார். இந்த அதிகாரப்பூர்வமான சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறும் பொழுது, "தமிழகத்தின் இலந்தை, கானனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திரிபுனை ஆகிய கிராமங்களுக்கு இருப்புப் பாதையை கடந்து செல்ல தற்போதுள்ள சுரங்கப்பாதைதான் ஒரே வழி என்றும் ஆண்டு முழுவதும் பெரும்பாலான மாதங்களில் அதில் தண்ணீர் நிரம்பி வழிகிறது என்றும் என்னிடம் ரமேஸ்வரம் சென்றிருந்தபோது, அந்த கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆண்டு முழுவதும் மழைகாலங்களில் வெள்ளநீர் சூழ்ந்துவிடுகிறது, அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் தற்போதுள்ள சுரங்கப்பாதை வழியாக தண்ணீரில் தத்தளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுதத்தன் காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லந்தை கிராமத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கில் ஆட்கள் கொண்ட கேட் அமைக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், மேம்பாலம் கட்ட மத்திய அமைச்சர் அனுமதி தந்து இருக்கிறார்.
இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் வலைதள பக்கங்களில் தமிழக பாஜக பொது செயலாளர் Dr. SG சூர்யா அவர்கள் பதிவிடும் பொழுது, "மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இராமநாதபுரம் வருகையின் போது கோரிக்கையாக இலந்தை, கானனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திரிபுனை ஆகிய கிராமங்களுக்கு இருப்புப் பாதையை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டி மனு கொடுத்தது விளைவாக உடனடியாக மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பேசி அனுமதி வாங்கி தந்தமைக்கு தமிழக பா.ஜ.க சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று மத்திய நிதி அமைச்சருக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News