புறக்கணிக்கப்பட்டு தூத்துக்குடி போல்டன்புரம்! பட்டியலின மக்கள் பகுதி என்பதால் புறகணிப்பு என திமுக அமைச்சர்கள், மேயர் மீது மக்கள் கொந்தளிப்பு!
By : Sushmitha
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருவதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதியிலிருந்து கனமழை பெய்ய ஆரம்பித்ததாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு தூத்துக்குடியின் சில முக்கிய பகுதிகளில் அதிக அளவிலான மழை பதிவாகியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ள நிவாரணம் எங்கள் பகுதிக்கு கிடைக்கவே இல்லை என்றும் பாதிப்பு இல்லாத பகுதிகளை ஓடி ஓடி பார்க்கும் அமைச்சர்கள் எங்கள் பகுதிக்கு வரவே இல்லை என்றும் தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் குற்றம் சாடி உள்ளனர்.
அதாவது மழை பெய்து நான்கு நாட்களாகியும் பட்டியலின மக்கள் உள்ள பகுதி என்பதால் எங்கள் பகுதி புறக்கணிக்கப்படுகிறது என்று எங்களுக்கு தோன்றுகிறது காரணம் இதுவரை எந்த அமைச்சர்களும் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை! மேயரும் வரவில்லை எங்களுக்கு நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி கூட வரவில்லை குடிக்க தண்ணீரும் இன்றி உணவு இன்றி தவித்து வருகிறோம் தேங்கியிருக்கும் மழை நீரையும் அகற்றுவதற்கு ஆட்கள் வரவில்லை!
இதனை தெரிவிப்பதற்காக நாங்கள் மேயரிடம் வரும்பொழுது அவர் எங்களை தரம் தாழ்ந்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளாரே தவிர உதவி செய்வதற்கு அவர் முன்வரவில்லை. அதனால் அவர்கள் தந்த உதவியை புறக்கணித்துவிட்டு நாங்கள் வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். பாதிப்பே இல்லாத மக்களுக்கு எல்லா நிவாரண பொருட்களும் கிடைக்கிறது ஆனால் பாதிப்படைகிற எங்களுக்கு தண்ணியோ உணவோ எதுவும் கிடைக்கவில்லை என்று போல்டன்புர மக்கள் தங்களது வேதனைகளை தெரிவித்துள்ளனர்.
Source : Junior vikatan