Kathir News
Begin typing your search above and press return to search.

குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்!

குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்!

SushmithaBy : Sushmitha

  |  23 Dec 2023 1:48 AM GMT

வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பங்கேற்க உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது மற்ற நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு (2023) எகிப்த அதிபர் அப்தெல் பதா அல்சிசி பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தின விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் யார் என்று எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வரும் ஆண்டை போன்றே இதற்கு முன்பாகவும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சில தலைவர்கள் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்துள்ளனர். அந்த வகையில் 1976 மற்றும் 1998 ஆம் ஆண்டு பிரான்ஸ் பிரதமர் மற்றும் அதிபர் பதவிகளை பெற்றிருந்த ஜாக்ஸ் சிராக் பங்கேற்றார் அதற்குப் பிறகு 2008 மற்றும் 2016 நிக்கோலஸ் சர்கோசியும் பிரான்கோயிஸ் ஹாலண்டேவும் சிறப்பு விருந்தினர்களாக குடியரசு தின விழாவில் பங்கேற்றுள்ளனர்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News