Kathir News
Begin typing your search above and press return to search.

நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்! வலுபெரும் தொலைதொடர்பு, தேர்தல் ஆணையம், பத்திரிக்கை துறைகள்!

நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்!  வலுபெரும் தொலைதொடர்பு, தேர்தல் ஆணையம், பத்திரிக்கை துறைகள்!

SushmithaBy : Sushmitha

  |  23 Dec 2023 1:52 AM GMT

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தொலைதொடர்பு சட்டத்திற்கு பதிலாக புதிய தொலைதொடர்பு மசோதாக்கள் மாநிலங்களவை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தொலைத் தொடர்பில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வளர்ச்சி, அலைக்கற்றை ஒதுக்கீடு, நெட்வொர்க், தொலைதொடர்பு சேவை ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதோடு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றைய தினமே மக்களவையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்ட மசோதாவும் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார், தேர்தல் ஆணையர்களின் நியமனம் எப்படி? அவர்களது சேவைக்காலம் எத்தனை? பதவியில் இருக்கும் போது அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான அனைத்து விவரங்களும் இந்த மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பத்திரிகைகள், இதழ்கள் ஆகியவற்றை பதிவு செய்வதற்கான சட்ட மசோதாவையும் இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார். அதாவது மாநிலங்களவையில் ஏற்கனவே இருந்த பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் பதிவு சட்டம் 1867 க்கு மாறாக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Source : The Hindu Tamilthisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News