"நாட்டின் பெருமைக்காவும் புகழுக்காவும் வாழ வேண்டும்" வீர் பால் திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் அறிவுரை!
By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி இன்று வீர் பால் திவாஸ் என்கிற சீக்கிய குழு குரு கோவிந்த் சிங்கின் தியாகத்தை நினைவு கூறும் நாளை கொண்டாடும் விதத்தில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில், பிரதமர் மோடி இந்தியா தனது சொந்த மக்களின் ஆற்றலையும் உத்வேகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறது, நாம் நம் பாரதத்தின் மீது கொண்டுள்ள பெருமையே நம்மை இந்த உலகம் வித்தியாசமாக பார்க்க வைக்கிறது. இதற்கு மேலும் நாம் ஒரு நொடி கூட வீணடிக்க கூடாது என குருக்கள் நமக்கு போதனைகளாக இதனை கொடுத்துள்ளனர்.
ஆதலால் நாம் அனைவரும் நம் நாட்டின் பெருமைக்காகவும் புகழுக்காகவும் வாழ வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டு முதல் வீர் பால் திவாஸ் டிசம்பர் 26ஆம் தேதி முறையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு வீர் பால் திவாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
Source : Dinamalar