வெள்ளத்திற்கு பின் அடுத்த ஆபத்தில் சிக்கிய சென்னை! அதிர்ச்சியில் மக்கள்!
By : Sushmitha
கடந்த மூன்று மற்றும் நான்கு ஆம் தேதிகளில் சென்னையை தாக்கிய மிக்ஜம் புயலால் சென்னையும் அதை சுற்றிய செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழை பெய்ததால் மின்சாரமும் தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டது சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்பிற்ககுள் மழைநீர் புகுந்து அன்றாட தேவைகளுக்கும் மக்களால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
2015 விட அதிக வெள்ள பாதிப்பை இந்த முறை மக்கள் சந்தித்தனர். மழை நின்ற பிறகும் நீண்ட நாட்களாக சென்னையில் தேங்கிய வெள்ள நீர் வடியாமல் இருந்தது திமுக அரசியல் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. பால் குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடினர் பாலிற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அதிக விலை கொடுத்தும் சிலர் தங்களது குழந்தைகளுக்காக பாலை வாங்கி சென்றனர். இதனால் சென்னை முழுவதும் திரும்பிய பக்கம் எல்லாம் போராட்டக் களமாக இருந்தது மக்களை மீட்பதற்கும் நிவாரண பொருட்கள் கொடுப்பதற்கும் அந்த நேரத்தில் யாரும் இல்லாதது சென்னை மக்களை மிக கோபத்தில் தள்ளியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் எம்எல்ஏக்கள் என ஒருவரை கூட அந்த நேரத்தில் களத்தில் பார்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் மழை வெள்ள பாதிப்பிற்காக ரூபாய் நாலாயிரம் கோடி செலவழிக்கப்பட்டதாக அரசு தரப்பில் வெளியான தகவல் மக்களை கொந்தளிக்க வைத்து பல கேள்விகளை அரசை நோக்கி கேட்க வைத்தது. மழை நின்று கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் சில பகுதிகள் சேதத்திலிருந்து மீண்டு வராமல் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து நேற்று முனதினம் நள்ளிரவு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாய்யில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர் போன்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கண் எரிச்சல் மயக்கம் வாந்தி மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அதோடு தொழிற்சாலையில் இருந்து வாயு கசிந்துள்ளது என்ற தகவல் கிடைக்கப் படவில்லை என்றும் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களே இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்ததாகவும் அதற்குப் பிறகே அக்கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேறி உள்ளனர்.
இருப்பினும் வாயு கசிவால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தொழிற்சாலை தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் வாயுக் கசிவை கட்டுக்கொள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த தனியார் உர ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நாங்கள் இறந்து தான் நீங்கள் உணவு சாப்பிட வேண்டுமா என்ற கருத்துக்களை வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்களின் கோபம் அனைத்தும் அரசின் மீது திரும்பியுள்ளது, காவல்துறை அனைவரும் பாதுகாப்பிற்கு இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எங்களது பாதுகாப்பிற்கு தான் இருக்கிறார்களா அல்லது ஆலையின் பாதுகாப்பிற்கு இருக்கிறார்களா என்று தெரியவில்லை என ஆட்சியாளர்கள் மீது மக்களின் கோபம் திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மீண்டு வருவதற்குள் வடசென்னை மக்களுக்கு தற்பொழுது அடுத்த இடி இறங்கி உள்ளது! கண்டிப்பாக வரும் தேர்தல்களில் இது எதிரொலிக்கும் என தெரிகிறது.