மேம்பாலம் அமைக்க உதவிய மத்திய அமைச்சருக்கு மரியாதை.. நன்றி மறவாத ராமநாதபுர மக்கள்..
By : Bharathi Latha
ராமநாதபுரம் லாந்தை உள்ளிட்ட எட்டு கிராமத்திற்கு செல்லும் பகுதியில் ரயில்வே சுரங்கம் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் இந்த சாலையை கடக்க மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். மேலும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் பல கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனிடையே பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து இந்த பகுதி மக்களின் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டிய ஒரு கோரிக்கையை முன்வைத்து மனு ஒன்று கொடுத்து இருந்தார்.
உடனே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ரயில்வே அமைச்சருடன் இதைப் பற்றி எடுத்துரைத்து மேம்பாலம் கட்டுவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார் பிறகு ரயில்வே அமைச்சகம் சார்பில் தற்பொழுது மேம்பாலம் கட்ட உத்தரவு ஒன்று வந்து இருக்கிறது இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அந்த சாலைக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடைய பெயரை சூட்டி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக பா.ஜ க மாநில செயலாளர் ராமசீனிவாசன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிர்மலா சீதாராமன் பெயரில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை கிராமங்களுக்கு ரயில்வே மேம்பாலம் அமைத்துக் கொடுத்தார் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்.... பல வருடங்கள் கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் இருந்த மக்கள் பிரச்சனையை ஒரே நாளில் ரயில்வே அமைச்சகத்துடன் பேசி செய்து கொடுத்தார்" என்று பதிவிட்டுள்ளார்.
Input & Image courtesy: News