மோடி அரசின் திட்டங்களினால் வலுப்பெறும் விவசாயத் துறை.. உதாரணம் இதோ..
By : Bharathi Latha
உணவு பதப்படுத்துதல் துறை விவசாய வருமானத்தை அதிகரிப்பதிலும், பண்ணை சாரா வேலைகளை உருவாக்குவதிலும், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் உற்பத்தியில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன்படி, நாட்டில் உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகம் பல முயற்சிகளை மேற் கொண்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் அதன் திட்டங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் உணவு பதப்படுத்துதல் துறையின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ரூ.3287.65 கோடியை ஒதுக்கியுள்ளது, இது 2022-23 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.1901.59 கோடியைவிட சுமார் 73% அதிகமாகும். உணவு பதப்படுத்துதல் துறையின் மொத்த மதிப்புக் கூட்டல் 2014-15 ஆம் ஆண்டில் ரூ.1.34 லட்சம் கோடியிலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் ரூ.2.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2023 வரை இத்துறை 6.185 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. வேளாண் ஏற்றுமதியில், பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியின் பங்கு 2014-15 ஆம் ஆண்டில் 13.7 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 25.6 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது. உணவு பதப்படுத்துதல் துறையில், 12.22% வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
திட்டங்களின் சாதனைகள் இதோ, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம் 2016-20-லிருந்து 2020-21 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. 14 வது எஃப்.சி சுழற்சிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது, மேலும் ரூ.4600 கோடி ஒதுக்கீட்டில் 15 வது எஃப்.சி சுழற்சியின் போது மறுசீரமைப்பிற்குப் பிறகு தொடர ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. ஜனவரி 2023 முதல், இதுவரை, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின், பல்வேறு கூறு திட்டங்களின் கீழ் மொத்தம் 184 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 110 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக செயலாக்கம் மற்றும் பாதுகாப்பு திறன் 13.19 லட்சம் மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது.
Input & Image courtesy: News