"வணக்கம் எனது மாணவக் குடும்பமே" திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிரதமர் பேச்சு
By : Sushmitha
திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய விமான முனையத்தை திறந்து வைப்பதற்காக திருச்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்தார்.
தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லம் நடராஜர் சிலையை பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக வழங்கினார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தமிழில் "வணக்கம் எனது மாணவக் குடும்பமே" என்று தனது உடை உரையை தொடங்கி 2024 ஆண்டில் நான் முதலில் பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இது! அதனால் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் முக்கியமானது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மிக அழகிய மாநிலமாக தமிழகம் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நீங்கள் பட்டம் பெற்றதில் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பங்கு உண்டு, அதேபோன்று சமூகத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையும் உண்டு மிகுந்த நம்பிக்கையுடன் இந்த சமூகம் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் வரலாற்றில் பல மாற்றங்களுக்கும் சாதனைகளுக்கும் மாணவர்களே காரணமானவர்கள்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் படிப்பதோடு உங்கள் கற்றல் நின்று விடக்கூடாது நம் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்கான திறன்களை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று உரையாற்றினார் பிரதமர் மோடி.
Source : Dinamalar