ஆளுங்கட்சியா இருந்துட்டுப்போ....! ஜோலார்பேட்டை உடன்பிறப்புகளை ஓடவிட்ட காவிகள்....! வரலாற்று சம்பவம்...
By : Sushmitha
ஜோலார்பேட்டை திமுகவினரை ஓடவிட்ட காவிகள்!
கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியில் 240 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்காக அயோத்தி சென்றிருந்தார், அயோத்தி தாம் சந்திப்பை பிரதமர் மோடி திறந்து வைத்த பிறகு மேலும் 2 புதிய அம்ரித் பாரத் ரயில்களையும் ஆறு வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸையும் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் தற்போது நாடு முழுவதும் பல இடங்களில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மணிக்கு அதிகபட்சமாக 130 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது அம்ரித் பாரத் ரயில்கள் என்ற புதிய ரயிலையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்ரித் பாரத் ரயில் சாமானியர்களின் வசதிக்காகவும் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டும் இந்தியன் ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் வந்தே பாரத் ரயிலை போன்ற ஈரோடைனமிக் முறையில் எஞ்சின்களை கொண்டும் குளிரூட்டபடாத பெட்டிகளை கொண்ட எல்ஹெச்பி புஷ் புல் ரயில் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதோடு மிக அழகான மற்றும் கவர்ச்சிகரமான இருக்கைகளையும் சிறந்த லக்கேஜ்ரேக் மொபைல் ஹோல்டர் உடன் கூடிய சார்ஜர், LED விளக்குகள் மற்றும் CCTV ஆகிய மேம்பட்ட வசதிகளை கொண்டது என்று மத்திய அரசு தரப்பில் செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்காக 8 பொது மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 12 இரண்டாம் வகுப்பு மூன்றடுக்கு ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் இரண்டு காவலர் பெட்டிகள் என மொத்தம் 22 பெட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமரால் தொடங்கப்பட்ட இரண்டு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்களில் ஒன்று தர்பங்கா - அயோத்தி - ஆனந்த விஹார் டெர்மினல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றொன்று மால்டா டவுன் - பெங்களூரு அம்ரித் பாரத் ரயில் எக்ஸ்பிரஸ் ஆகும். இதில் மால்டா டவுன் முதல் பெங்களூர் செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்த பொழுது ஜோலார்பேட்டையில் அம்ரித்பாரத் ரயிலை வரவேற்பதற்காக கூடி இருந்த திமுக மற்றும் பாஜகவினருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
யார் முதலில் அம்ரித் பாரத் ரயிலை வரவேற்பது என்ற வாக்குவாதமும் ஏற்பட்டு தள்ளு முள்ளும் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் பாஜகவினர் பெங்களூரு செல்லும் அம்ரித் பாரத் ரயிலை வரவேற்போம் இன்றும் மறுபக்கம் திமுகவினர் இது எங்கள் ஆட்சி அதனால் நாங்கள் தான் வரவேற்போம் என்றும் சச்சரவில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 30ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் டால்டாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த பெங்களூர் அம்ரித் பாரத் ரயில் திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு பெங்களூரை சென்றடைகிறது. அந்த நிலையில் திங்கட்கிழமை மாலை ஐந்து முப்பது மணிக்கு ஜோலார்பேட்டை வந்தடைந்த ரயிலை யார் வரவேற்பது என்பதில் திமுக மற்றும் பாஜகவினருக்கிடையே போட்டி ஏற்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் இந்த நிகழ்வில் திமுக மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட போராட்டம், ஆளுங்கட்சியாக இருப்பினும் திமுகவினரை பாஜகவினர் ஓடவிட்ட தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.