Kathir News
Begin typing your search above and press return to search.

பாலைவன புயல்: இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு ராணுவப் பயிற்சி..

பாலைவன புயல்: இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு ராணுவப் பயிற்சி..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Jan 2024 1:34 AM

'பாலைவன புயல்' என்ற இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கி இருக்கிறது. பாலைவன புயல் என்ற இந்திய - ஐக்கிய அரபு கூட்டு ராணுவப் பயிற்சியின் முதல் பதிப்பில் பங்கேற்க 45 வீரர்கள் அடங்கிய ஐக்கிய அரபு அமீரகத்தின் தரைப்படையினர் இந்தியா வந்துள்ளனர். கூட்டு ராணுவப் பயிற்சி 2024 ஜனவரி 2 முதல் 15-ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் சையீத் முதல் படைப்பிரிவின் வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த காலாட்படையின் பட்டாலியன் வீரர்கள் 45 பேர் இதில் பங்கேற்கின்றனர்.


ஐ.நா சபை அமைதி நடவடிக்கைகளின் 7-வது பகுதியின் கீழ் பாலைவனம் பகுதி, பாலைவனங்களில் உள்ள கட்டமைப்பு பகுதிகளில் சண்டையிடுதல் உள்ளிட்ட விரிவாக்கப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடுவதே இதன் நோக்கமாகும். அமைதி நடவடிக்கைகளின்போது பரஸ்பரம் இருதரப்புகளின் ஒருங்கிணைப்பை இந்தப் பயிற்சி விரிவுபடுத்தும்.


பாலைவனப் புயல் பயிற்சியின் போது ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் அமைத்தல், குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் மூலம் இரு தரப்புகளுக்குமிடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் ஒருங்கிணைந்த நட்புணர்வை மேம்படுத்துவதற்கும் உதவும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News