இந்தியாவின் வளர்ச்சி பிரமாதம்.. சொல்லியது யார் தெரியுமா சீனா..
By : Bharathi Latha
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம், மேம்பட்ட சர்வதேச உறவுகளை சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை அங்கீகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, சமூக நிர்வாகம், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள சிறப்பான முன்னேற்றங்களைப் பாராட்டி பெய்ஜிங்கில் செயல்பட்டு வரும் பிரபல சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிகை ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஷாங்காய் புடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜாங் ஜியாடோங் எழுதிய இந்த கட்டுரை, கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது.
இது இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகத்தில் மேம்பாடுகள், சர்வதேச qஉறவுகள், குறிப்பாக சீனாவுடனான அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றை அங்கீகரித்துள்ளது. உதாரணமாக, சீனாவிற்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வு குறித்து விவாதிக்கும்போது, இந்திய பிரதிநிதிகள் முன்பு வர்த்தக ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான சீனாவின் நடவடிக்கைகளில் முதன்மையாக கவனம் செலுத்தினர். ஆனால் தற்போது அவர்கள் இந்தியாவின் ஏற்றுமதி திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்" என்று ஆசிரியர் எழுதியுள்ளார்.
நாட்டின் உத்தி சார்ந்த நம்பிக்கையை வலியுறுத்தும் பாரதத்தின் வளர்ச்சியை அடைவதில் இந்தியாவின் செயல்மிக்க அணுகுமுறையை இக் கட்டுரை பாராட்டுகிறது. அதன் விரைவான பொருளாதார, சமூக வளர்ச்சியால், ஒரு பாரத வளர்ச்சியை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் அதிக உத்தி சார்ந்த நம்பிக்கையுடனும், சுறுசுறுப்பாகவும் மாறியுள்ளது என்று ஆசிரியர் கூறுகிறார். அரசியல், கலாச்சாரத் துறைகளில், மேற்கத்திய நாடுகளுடனான அதன் ஜனநாயக ஒருமித்த கருத்தை வலியுறுத்துவதில் இருந்து, ஜனநாயக அரசியலின் இந்திய அம்சத்தை முன்னிலைப்படுத்துவதற்கு இந்தியா நகர்ந்துள்ளது. தற்போது, ஜனநாயக அரசியலின் இந்திய உருவாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.மேலும், பிரதமர் திரு மோடி தலைமையின் கீழ், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உத்தியைப் பாராட்டுகிறது. நாட்டின் பன்முக அணுகுமுறை, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற முக்கிய உலக சக்திகளுடனான உறவுகளை வலுப்படுத்துதல், ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதலில் ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை காணுதல் உள்ளிட்டவற்றை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
Input & Image courtesy: News