சூரியனின் எல் ஒன் புள்ளியை அடைந்த ஆதித்யா எல் ஒன்! இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர்!
By : Sushmitha
கடந்த வருடம் செப்டம்பர் இரண்டாம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோளின் முக்கிய நோக்கமாக பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டரை 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள எல் ஒன் எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியை அடைய முடிவு செய்து சூரியனை ஆராய அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் இன்று லாக்ரஞ்சியன் புள்ளியை ஆதித்யா எல் 1 அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையமான ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைந்தது. மிகவும் சிக்கலான மற்றும் சிக்கல் நிறைந்த விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து தொடர்வோம். என பதிவிட்டு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளை பாராட்டினார்.
இதனை அடுத்து சூரியன் குறித்த செயல்பாடுகளையும் வானிலையில் சூரியன் ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆதித்யா எல் ஒன் விண்கலம் ஆய்வு செய்யும் என்றும் இந்த விண்கலத்தில் உள்ள ஏழு சாதனங்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Source : Dinamalar