நாட்டின் முதல் ஆரோக்கியமான உணவு தெருவான 'பிரசாதம்'.. எங்கு இருக்கு தெரியுமா..
By : Bharathi Latha
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள சாதாரண குடிமக்களை தூய்மையான மற்றும் பாதுகாப்பான உள்ளூர் மற்றும் பாரம்பரிய உணவுடன் பிரசாதம் இணைக்கும். இந்த முயற்சி சாதாரண மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு ஒருங்கிணைக்கும். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள மகாகால் லோக், நீல்காந்த் வானில் நாட்டின் முதல் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுத் தெருவான 'பிரசாதம்' இன்று திறந்து வைக்கப்பட்டபோது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இதனைத் தெரிவித்தார்.
அவருடன் மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், மத்தியப் பிரதேச மாநில துணை முதலமைச்சர் ராஜேந்திர சுக்லா, மத்தியப் பிரதேச மாநிலத்தின் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் மற்றும் மக்களவை உறுப்பினர் தஅனில் பிரோஜியா ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை மீண்டும் உறுதிப்படுத்திய டாக்டர் மாண்டவியா, "வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய, நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.
கணிசமான சுகாதார உள்கட்டமைப்பைத் தவிர, சுகாதாரமான ஆரோக்கியமான உணவு ஒரு குடிமகனின் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியமான அங்கமாக அமைகிறது. வரும் நாட்களில், ஒவ்வொரு நகரமும் அதன் சொந்த உணவுத் தெருவைக் கொண்டிருக்கும், இது ஆரோக்கியமான உணவு நாடு முழுவதும் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்யும்,” என்று கூறினார். ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு தெரு, முன்முயற்சிக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மத்திய சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார். ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுத் தெருக்களுக்கான நிலையான இயக்க நடைமுறையை சுட்டிக்காட்டும் கையேட்டையும் அவர் வெளியிட்டார்.
Input & Image courtesy: News