Kathir News
Begin typing your search above and press return to search.

மக்கள் தொகை எண்ணிக்கையில் தொடர்ந்து சீனாவை முறியடித்த இந்தியா!

மக்கள் தொகை எண்ணிக்கையில் தொடர்ந்து சீனாவை முறியடித்த இந்தியா!

SushmithaBy : Sushmitha

  |  18 Jan 2024 4:32 AM GMT

கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் கிட்டத்தட்ட 8 லட்சத்து 50 ஆயிரம் மக்களை இழந்த சீனா தற்போது இரண்டாவது ஆண்டாக மக்கள் தொகையில் பின்தங்கி உள்ளது.


கொரோனா தொற்றுக்கு முன்பு உலக மக்கள் தொகையில் முன்னிலை வகித்து வந்த சீனா 1960 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக சீன மக்கள் தொகையானது கொரோனா காலத்தில் குறைய ஆரம்பித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு சீன நாட்டின் பிறப்பு விகிதம் 95.6 லட்சமாக இருந்தது இதே பிறப்பு விகிதம் 2023 ஆம் ஆண்டு ஆயிரத்திற்கு 6.39 சதவிகிதம் என்ற அடிப்படையில் இருந்த நிலையில் இதன் விகிதமானது 90.2 லட்சமாக குறைந்துள்ளது! அதே சமயத்தில் தொற்றால் ஏற்பட்ட மரணங்களும் கடந்த ஆண்டு அதிகரித்ததாகவும் இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 6.6% உயர்ந்து இறப்பு எண்ணிக்கையை 1.11 கோடியாக அதிகரித்ததாகவும் புள்ளி விவரங்களின் துறையில் இருந்து அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.


இப்படி மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை பெற்ற இந்தியா 2021 ஆம் ஆண்டு முதல் ஒரு தம்பதிக்கு மூன்று குழந்தைகள் வரை பெறுவதற்கு அனுமதி வழங்கி மக்கள் தொகையை பெருக்கும் நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டது இருப்பினும் மக்கள் தொகையில் முதல் நாடாக இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி தற்போது இந்தியா உலகில் அதிக மக்கள் தொகையின் முதல் நாடாக விளங்குகிறது.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News