Kathir News
Begin typing your search above and press return to search.

ஜல்லிக்கட்டில் அரசியல் செய்யும் அரசு! அவேசமாக குற்றம் சாட்டிய வீரர்!

ஜல்லிக்கட்டில் அரசியல் செய்யும் அரசு! அவேசமாக குற்றம் சாட்டிய வீரர்!

SushmithaBy : Sushmitha

  |  19 Jan 2024 6:00 AM GMT

கடந்த ஜனவரி 16 தேதியான மாட்டுப் பொங்கல் தினத்தன்று மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி சேர்ந்த கார்த்திக் முதலிடத்தையும் 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிஷிதர் இரண்டாவது இடத்தையும் பெற்றதாக அறிவிப்புகள் வெளியானது. இந்த வருடம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ள அபிஷிதர் கடந்த வருடம் முதல் பரிசு பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த முறை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அபிஷிதர் குற்றம் தெரிவித்துள்ளார். அதாவது "நான் சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த அபிஷிதர் கடந்த வருடம் 30 காளைகளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அடக்கி முதல் பரிசை வென்றேன் ஆனால் அப்பொழுது 26 காளைகளை மட்டுமே அடக்கியதாக தெரிவித்தனர் அன்றும் இதில் அரசியல் செய்தனர் இன்றும் இந்த அரசு அரசியல் மட்டுமே இதில் செய்கிறது!


அதுவும் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரு பரிந்துரையின் மூலம் கடந்த ஆண்டு வந்தவர், நான் இரண்டு சுற்றுகளில் 11 காளைகளை அடக்கினேன் ஆனால் அவர் மூன்று சுற்றுகளில் 11 காளைகளை அடக்கினார் அவருக்கு மட்டும் ஏன் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது என நான் கேட்ட பொழுதும் போலீசார் என்னை தாக்கி வெளியேற்றினார்! அதுமட்டுமின்றி நான் பிரச்சினையை உருவாக்குவதாக கார்த்திக் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் அனைவரும் என்னை காளையை அடக்கவிடாமல் தடுத்து வந்தனர். இந்த பிரச்சனையை கமிட்டியும் கவனிக்காமல் அலட்சியம் செய்து வெற்றியாளர்களை அறிவித்துவிட்டது! இது முழுக்க முழுக்க அரசியல் எனக்கு எதுவும் வேண்டாம் வீடியோவை பார்த்து முதல் பரிசு வென்றவன் என அறிவிக்க வேண்டும்" என்று ஆதங்கத்துடன் பத்திரிகையாளரிடம் தனது குற்றச்சாட்டை முன் வைத்தார் அபிஷிரீதர்!

Source : The Commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News