தொடக்க கல்வி ஆசிரியர்கள் கொந்தளிப்பு! திமுக அரசின் மீது இருந்த எதிர்பார்ப்புகளில் தொடரும் அதிருப்தி!
By : Sushmitha
தமிழகத்தில் சமீபத்தில் வெளியான தொடக்க கல்வியில் ஆசிரியர் நியமனம், முன்னுரிமை, பதவி உயர்வு ஆகியவற்றைக் குறிக்கும் அரசாணை எண் 243 தொடக்க கல்வியை முடக்கும் வகையில் அமைந்துள்ளது.
தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 243, கல்வி ஒன்றியம் மாவட்டத்திற்குள் நடந்து வந்த பதவி உயர்வை இனிமேல் மாநில சீனியார்டிகளின் அடிப்படையில் நடக்கும் என்று கூறுகிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு இருந்து வந்த பதவி உயர்வு வாய்ப்பு தற்போது பறிக்கப்பட்டுள்ளது! இது மாநில அளவில் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பொழுது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து எதிர்பார்ப்பு அனைத்தும் தற்போது தவிடு பொடியாகிவிட்டது! போராட்டங்கள் வெடித்த பொழுது பேச்சுவார்த்தைகள் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது ஆனால் தற்போது பேச்சுவார்த்தைகள் அனைத்துமே பயனற்று போய்விட்டது! என்றும் இதுவரை பட்டதாரி ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை தகுதி உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வந்தனர், ஆனால் தற்பொழுது பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் என்று திருத்தப்பட்டு அரசு அறிவித்திருப்பது ஒரு லட்சம் பேருக்கான பதவி உயர்வு வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தவற்றை திமுக அரசு உடைத்து மாற்றம் கொண்டு வந்திருப்பது தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் உச்ச அதிர்ச்சிக்கு காரணமாக அமைந்ததுள்ளது என்றும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar