தமிழகத்தில் பிரதமரின் மூன்று நாள் பயணம்! ஆன்மீக தலங்களுக்கு செல்லும் பிரதமர்!
By : Sushmitha
மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் மத்திய இணை அமைச்சர்களின் முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய அமைச்சர்கள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
அதற்குப் பிறகு இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஓய்விற்கு முன்பாக தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் பொழுது நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து நாளை காலை திருச்சி சென்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமியை வழிபட்டு பிறகு அன்று மதியமே பிரதமர் ராமேஸ்வரம் செல்கிறார் என்றும் அங்கு ராமநாதசாமி கோவிலில் ராமநாதசுவாமி தரிசனம் செய்துவிட்டு சிறிது நேரம் ஓய்வேடுத்து விட்டு பிறகு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அச்சல் முனை மற்றும் கோதண்டராமசாமி கோவிலுக்கும் பிரதமர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
Source : Puthiyathalaimurai & News 18