Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்ரோ பகிர்ந்தது அயோத்தி ராமர் கோவிலின் விண்வெளி பார்வை!

இஸ்ரோ பகிர்ந்தது அயோத்தி ராமர் கோவிலின் விண்வெளி பார்வை!

SushmithaBy : Sushmitha

  |  22 Jan 2024 2:08 AM GMT

500 ஆண்டு காலத்திற்கு பிறகு அயோத்தியில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தியா சார்பில் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய செயற்கைக்கோள் ராமர் கோவிலை எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்து உள்ளது.


இந்த படம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது, அதோடு தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த புகைப்படத்தில் சரயு நதி, அயோத்தி ராமர் கோவில், ரயில் நிலையம், தசரத் மஹால் ஆகியவை செயற்கைக்கோளால் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது.


மேலும், கிழக்கு மேற்கு திசையில் அமைந்திருக்கும் ராமர் கோவில் வளாகம் 250 அடி அகலமும் 380 நீளமும் மற்றும் 166 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று தளங்களை கொண்டுள்ள ராமர் கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது, அதோடு 392 தூண்களும் 44 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News