Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மன்னர் தம்பதி! பிறவி பயனை அடைந்துவிட்டோம்!

ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மன்னர் தம்பதி! பிறவி பயனை அடைந்துவிட்டோம்!

SushmithaBy : Sushmitha

  |  24 Jan 2024 12:06 PM GMT

கடந்த ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்த பொழுது நடைபெற்ற சங்கல்ப பூஜையில் கலந்து கொள்வதற்கு நாடு முழுவதிலும் இருந்து 16 தம்பதிகளுக்கு அழகு விடுக்கப்பட்டுள்ளது அவர்களில் ஒருவராக தமிழகத்தைச் சேர்ந்த ஆடலரசன் மற்றும் லலிதா பங்கஜவல்லி தம்பதிகளும் அடங்குவர்.

அதாவது ஆடலரசன் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் மகள் வழி கொள்ளுப்பேரன் ஆவார், அதோடு அவரது மனைவியான லலிதா பங்கஜவல்லியும் தற்போதைய ராமநாதபுரம் ராணியாக உள்ள ராஜேஸ்வரி நாச்சியாரின் தங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் சங்கல்ப பூஜையில் கலந்து கொண்ட இவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை இடமிருந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பாகவே எனது மனைவியுடன் ராமர் கோவிலின் கும்பாபிஷேக சங்கல்ப பூஜைகள் கலந்து கொள்வதற்கு அழைப்பு வந்தது, நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 தம்பதிகளில் நாங்களும் அதில் கலந்து கொண்டது மிக பாக்கியமாக கருதுகிறோம். ஒருபுறம் எட்டு தம்பதிகளும் மறுபுறம் எட்டு தம்பதிகளும் அமர்ந்திருக்க நடுவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உத்திரபிரதேசம் கவர்னர் மற்றும் முதல்வர் ஆகியோர் அமர்ந்து பூஜை செய்தனர்.

சங்கல்ப பூஜைகள் முடிந்த பிறகு கர்ப்ப கிரகத்தில் பாலராமருக்கு முதல் பூஜை நடந்தது அதிலும் பங்கேற்று ஆரத்தி காட்டினோம். ராமநாதபுரம் சேதுபதி மன்னர் குடும்பத்திற்கும் ராமருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, ஏனென்றால் சேது மன்னர்கள் ராமர் பாலத்தை பாதுகாத்தவர்கள் ஆதலால் ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை நினைவு கூர்ந்து ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு எங்களை அழைத்தது பெருமைப்படுத்தும் நிகழ்வாக உள்ளது என்றும் பிறவி பயனை அடைத்து விட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News