Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்காளர் தினத்தன்று இளம் வாக்காளர்களிடம் உறுதி அளித்த பிரதமர்!

வாக்காளர் தினத்தன்று இளம் வாக்காளர்களிடம் உறுதி அளித்த பிரதமர்!

SushmithaBy : Sushmitha

  |  25 Jan 2024 12:46 PM GMT

தேர்தல் ஆணையம் ஆனது 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி நிறுத்தப்பட்டது அதனை நினைவு கூறுவதற்காக கடந்த 2011ம் ஆண்டிலிருந்து ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில் இன்று கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிறது.

அதில் ஒரு நிகழ்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரென்சிங் வாயிலாக இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடினார். அதில், நம் நாட்டின் ஜனநாயக நடைமுறையில் நீங்கள் அனைவரும் முக்கிய அங்கமாக மாறி உள்ளீர்கள் இளம் வாக்காளர்களுடன் இருப்பதே மிகவும் உற்சாகமளிக்கிறது என்று கூறி, உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டும் எதிர்கால இந்தியாவையும் நாட்டின் பாதையையும் தேர்ந்தெடுத்து நிர்மாணிக்க கூடிய சக்தியை கொண்டது.


பல பகுதிகளுக்கு சென்று உலகத் தலைவர்கள் ஒவ்வொருவரையும் நான் சந்திக்கும்பொழுது நான் மட்டும் தனிப்பட்ட முறையில் அவர்களை சந்திப்பதாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை 140 கோடி மக்களும் என்னுடன் இருப்பதையே நான் உணர்கிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு மற்றும் உங்களின் எதிர்காலத்திற்காக நீங்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.


கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டின் நிலவியில் சூழ்நிலைகளும் எதிர்காலத்தில் இளைஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாகியது! அதேபோன்று ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த தலைப்புச் செய்திகளை வெளிவந்தன ஆனால் தற்பொழுது வெற்றி கதைகள் பேசப்படும் செய்திகளை வெளியாகிறது! குடும்பத்தால் நடத்தப்படும் கட்சிகள் நாட்டின் இளைஞர்கள் முன்னேறி செல்வதை அனுமதிக்காது அவற்றை அந்த கட்சிகளை உங்கள் ஓட்டுகள் மூலம் தோற்கடியுங்கள் "உங்கள் கனவே எனது லட்சியம் என்றும் இது மோடியின் வாக்குறுதி" என்றும் உரையாற்றினார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News