மற்றுமொரு கோவில் கண்டெடுப்பு! ஞானவாபி இருந்த இடத்தில் கோவிலா! தொல்லியல் துறை ஆய்வில் வெளிய தகவல்!
By : Sushmitha
வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி உள்ள ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தொல்லியல் துறை அப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட அதனை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை அடுத்து தொல்லியல் துறை ஞானவாபி அமைந்திருந்த இடத்தில் ஆய்வு நடத்தியது, ஆனால் ஆய்வறிக்கையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும் தொல்லியல் துறை வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் இந்த அறிக்கையை வெளியிடுவது வெளியிடுவது தொடர்பாக ஆய்வு செய்தது.
இந்த நிலையில் தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் செய்தியாளர் மத்தியில் தெரிவித்துள்ளார். ஞானவாபி வளாகம் அமைந்துள்ள இடத்தில் மிகப்பெரிய ஹிந்து கோவில் இருந்ததற்கான சாட்சியங்கள் மற்றும் தொல்லியல் துறை ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்துக் கோவில்களின் தூண்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு அதன் மீது ஞானவாபி வளாகத்தின் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், ஞானவாபி வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் ஏற்கனவே இருந்த ஒரு இந்து கோவிலின் ஒரு பகுதி தான் என்று தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி கோவில்களில் பயன்படுத்தப்பட்ட சிலைகள் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்ததாகவும், தேவகிரி, தெலுங்கு, கன்னடம் கிராதி உள்ளிட்ட 32 வகையான எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுகள் தொல்லியல் துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Source : Dinamalar