இறுதி கட்டத்தை எட்டும் என் மண் என் மக்கள் யாத்திரை! பிரதமர் பங்கேற்பு!
By : Sushmitha
கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் என் மண் என் மக்கள் நடை பயணம் ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் தலைமை ஏற்று பாதை யாத்திரியை தொடங்கி வைத்தார் மேலும் அங்கு இராமநாதபுர மாவட்ட மக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர். அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த யாத்திரை தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கு செல்ல உள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் ஒழிந்து மாறுபட்ட ஆட்சி அமைய வேண்டும் என்பதை மையமாக வைத்து பாதயாத்திரை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி இந்த பாதயாத்திரை எல்லாம் ஒரு சில நாளுக்கு தான் பேசப்படும் அதற்குப் பிறகு மக்களும் அதனை அங்கீகரிக்க மாட்டார்கள் என்ற பல விமர்சனங்கள் எதிர் தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரை ஒவ்வொரு மாவட்டத்தின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளும் நல்ல வரவேற்பை பெற்றது, மக்கள் அனைவரும் அண்ணாமலைக்கு ஏகபோக வரவேற்பு கொடுத்தனர். அதோடு அண்ணாமலை மேற்கொண்ட இந்த பாதயாத்திரை பாஜகவை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைத்துள்ளது என்று அரசியல் விமர்சகர்களும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் அடுத்த மாதம் இறுதியில் நிறைவு அடைய உள்ளதால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 300 ஏக்கர் இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது.
Source : Dinamalar