மொரார்ஜி தேசாய்யின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்! ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல்!
By : Sushmitha
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014 ஆண்டிலிருந்து ஆட்சி அமைத்து வருகிறது. இதில் 2014 - 2015 முதல் 2018 - 2019 வரையிலான ஐந்தாண்டு பட்ஜெட்டை அன்றைய நிதியமைச்சராக பதவி வகித்த அருண் ஜெட்லி தாக்கல் செய்து வந்தார். ஆனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நிதியமைச்சராக பியூஸ் கோயல் அமர்த்தபட்டார். இவர் 2019 ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதோடு 2019ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. அதனால் அப்பொழுது மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியில் அமர்த்தபட்டார். மேலும் இவர் நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்த இந்திரா காந்திக்கு பின் பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து 2019 - 2020 முதல் 2023 - 2024 வரையில் ஐந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது 2024 - 2025 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை ஆறாவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார்.
இப்படி ஆறு முறை பட்ஜெட்டை முந்தைய காலங்களில் நிதியமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மட்டுமே தாக்கல் செய்தார் என்றும் அவருக்கு பிறகு தற்போது நிர்மலா சீதாராமன் தான் ஆறு முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து மொரார்ஜி தேசாய் சாதனையை சமன் செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.
Source : Dinamalar