ஞானவாபில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு! வெளியான ஏஎஸ்ஐ அறிக்கை!
By : Sushmitha
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைக்கப்படுவதற்கு முன்பு இந்து கோவில் ஒன்று அங்கு இருந்ததாக இந்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திய தொல்லியல் துறைக்கு ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்வதற்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்திரவிட்டது.
இதனை அடுத்து ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை தற்பொழுது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் நான்கு மாத காலமாக ஞானவாபி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைக்கப்பட்ட அறிவியல் ஆய்வு, கட்டுமானங்களின் அம்சங்கள், கிடைக்கப்பட்ட கலைப் பொருள்கள், கல்வெட்டுகள் கட்டிடக்கலை எச்சங்கள், கலை மற்றும் சிற்பங்கள் கிடைத்தது அவற்றின் அடிப்படையில் ஞானவாபி மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் இந்து கோவில் ஒன்று இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மசூதியின் ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அரபு பாரசிக மொழியில் ஞானவாபி மசூதி ஒளவுரங்கசீப் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் 17ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒளவுரங்கசீப் ஆட்சியின் போது ஏற்கனவே இருந்த கட்டமைப்புகள் அளிக்கப்பட்டு அதன் மீது இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது என்றும் ஏஎஸ்ஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : BBC news தமிழ்