சட்டம் அனைவருக்கும் சமம்! அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜி! நீதிபதி கேள்வி!
By : Sushmitha
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்று தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அதற்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோவில் மனு தாக்கல் செய்யப்பட்டதும் கடந்த 12ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், புலன் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அதன் ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் உள்ளது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் தலைமறைவாக உள்ளார். எனவே இதனை முன்வைத்து ஜாமீனை மறுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியவற்றை குறிப்பிட்டு வாதாடினார்.
வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதிபதி ஆனந்த் தினேஷ் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த வழக்கில் 230 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார், மேலும் அவர் இதுவரை அமைச்சராக நீடிப்பது குறித்து இரு நீதிபதிகள் அமர்வும் கருத்து தெரிவித்திருந்தது, ஒரு கடை நிலை ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டால் 48 மணி நேரத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார், ஆனால் செந்தில் பாலாஜி 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளார். இருப்பினும் அவர் இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிக்கப்படுகிறது! இதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் கூறி செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
Source : News 18 தமிழ்