ஞானவாபியில் இந்துக்களுக்கு அனுமதி! உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றம்!
By : Sushmitha
உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடத்தில் இந்து கோவில் இருந்ததாகவும் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்வதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து நான்கு மாதங்களாக தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் ஞானவாபி மசூதி வளாகத்தில் கிடைத்த அறிவியல் ஆய்வு, கட்டிடக்கலை எச்சங்கள், கல்வெட்டுகள், கலை மற்றும் சிற்பங்கள் மேலும் கலைப் பொருள்கள் அனைத்தும் மசூதி இருந்த இடத்தில் இதற்கு முன்பு இந்து கோவில் ஒன்று இருந்ததற்கான அடையாளங்களாகும் என தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் வெளியிட்டது.
இந்த நிலையில் வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் தெற்கு நிலவரையில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்தும் அதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏழு நாட்களில் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு அளித்துள்ளது.
Source : News Tamil 24×7